பிரான்ஸ் எல்லைச் சென்றடைந்தது ஈருறுளி கனயீர்ப்புப் போராட்டம்


தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஜெனீவாவில் நடைபெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ஈருறுளிக் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறது.

பிரித்தானியாவிலிருந்து 31.08.2023 அன்று ஆரம்பித்த ஈருருளி கவனயீர்ப்புப் போராட்டமானது நெதர்லாந்து, பெல்சியம், யேர்மனி நாட்டின் லண்டோ, கால்ஸ்றூக நகரங்கள் ஊடாக 10ஆம் நாளாகிய இன்று சனிக்கிழமை பிற்பகல் பிரான்சஸ் எல்லையான ரைானா என்ற இடத்தைச் சென்றடைந்தது.

தொடர்ந்து பிரான்ஸ், சுவிஸ் ஊடாகப் பயணித்து 18.09.2023 அன்று ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்துடன் இணையவுள்ளது. 

No comments