யாழில். தாய் , மகள் மீது வாள் வெட்டு தாக்குதல்


யாழ்ப்பாணத்தில் தாய் மற்றும் மகள் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. 

நீர்வேலி பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த தாயும் மகளும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

வீட்டில் தாயும் மகளும் இருந்த வேளை வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் இருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு , தப்பி சென்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , தனிப்பட்ட பகை காரணமாகவே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

No comments