மன்னாரில் மின்சாரம் கேட்கும் ரணில்!



 மன்னார் மாவட்டத்தை, எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று, மன்னார் மடு மாதா தேவாலய திருவிழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர் மடு மாதா குடிகொண்டிருக்கும் இந்த மன்னார் பிரதேசம், அதிகளவு புதுப்பிக்கத்தக்க வலுசக்தியைக் கொண்ட பிரதேசமாகும்.

இங்கு கிடைக்கும் சூரிய சக்தி, காற்றாலை மற்றும் பசுமை ஆற்றல் மூலம், மன்னார் மாவட்டத்தை எரிசக்தி மையமாக உருவாக்க முடியும்.

பூநகரியை எரிசக்தி கிராமமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த புனித பூமியும், வனமும் பாதுகாக்கப்படும் வகையிலேயே, இந்த அபிவிருத்திச் செயற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நான் கூற விரும்புகின்றேன்.

இப்பிரதேசங்களின் அபிவிருத்திப் பணிகளின் போது, இங்குள்ள அருட்தந்தைகளின் ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் பெறுமாறு, அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளேன்.

அனைத்து செயற்பாடுகளின் ஊடாகவும், 2048 ஆம் ஆண்டளவில், அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப எதிர்பார்க்கிறோம். அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.’ எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


No comments