ரணில் முடிவு எடுக்கட்டும்!

 


இலங்கையில் நல்லிணக்கத்துக்கு எதிராகச் செயற்படும் கடும்போக்கு பௌத்த பிக்குகள் மீதான கடுமையான விமர்சனத்தை இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியான பிரையன் உடைக்வே ஆண்டகை வெளிப்படுத்தியுள்ளார்.

இன்று மன்னார் மடுத்திருப்பதியில் திருவிழாவில் பங்கேற்றிருந்த நிலையில், அவரின் விமர்சனம் வெளிப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டிய பாரிய பொறுப்பு மதத்தலைவர்களுக்கு உண்டென இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதி சுட்டிக்காட்டியிருந்தார்.

நாட்டைப் பிளவுபடுத்தும் முகவராக மாறுவதா அல்லது நாட்டை ஒன்றிணைக்கும் தலைவராக மாறுவதா என்பதை; தீர்மானிக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மடு தேவாலயத்தில் இலங்கை ஜனாதிபதி உரையாற்ற அனுமதிக்கப்பட்டமை கடும் விமர்சனங்களை தோற்றுவித்துள்ளது.

என்றுமில்லாதவகையில் இலங்கை ஜனாதிபதியொருவர் மடு  தேவாலயத்தில் உரையாற்ற அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.  


No comments