செஞ்சோலையில் 17ம் ஆண்டு நினைவேந்தல்!

 


முல்லைத்தீவு வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில், 2006ம் ஆண்டின் இதேநாளன்று இலங்கை வான்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

நினைவேந்தல் நிகழ்வு வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானத்தாக்குதல் இடம்பெற்ற நேரத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றிருந்தது.

அதேவேளை செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திலும்; நடைபெற்றிருந்தது.

யாழ் பல்கலைக்கழக  பிரதான தூபி வளாகத்தில் ஒன்று கூடிய மாணவர்கள்  உயிர்நீத்த பாடசாலை மாணவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி ஈகைசுடரேற்றி ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தினர்.

செஞ்சோலை  சிறுவர் இல்லத்தின் மீது  வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் படுகொலையான மாணவிகளை நினைவுகூர்ந்து கட்சி அலுவலகங்களிலும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


No comments