மூடப்பட்டது ஐரோப்பாவின் 2-வது பரபரப்பான தொடரூந்துப் பாதை!


முதன்முறையாக ஐரோப்பாவின் இரண்டாவது பரபரப்பான தொடருந்துப் பாதை ஒரு வார நாளில் மூடப்பட்டுள்ளது. இது பாரிஸ் பிராந்தியத்தில் உள்ள பயணிகளுக்கும் விமான நிலையத்திற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்துகிறது. 

சார்லஸ் டி கோல் விமான நிலையத்தை பிரான்சின் தலைநகருடன் இணைக்கும் புறநகர் தொடருந்துப் பாதையான RER B, புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதையின் வடக்குப் பகுதி கடந்த சனிக்கிழமை முதல் முழுமையாக மூடப்பட்டுள்ளது.  

இது பயணிகளுக்கு கடினமான நாள் என்று பிரஞ்சு அரசாங்கம் ஒப்புக்கொண்டது. ஆனால் இது "தேவையான முதலீடு" என்று பிரஞ்சு அரசாங்கம் மேலும் கூறியது.

இல்-டி-பிரான்ஸ் பிராந்தியத்தில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயணிக்கும்  இரண்டாவது பரபரப்பான பாதையாகும். ஒவ்வொரு நாள் காலை நெரிசல் நேரங்களில் உச்சகட்டமாக 200,000 பயணிகள் இத்தடத்தைப் பயன்படுத்துகின்றனர்.

அதிகபட்ச அணிதிரட்டல் மற்றும் மூன்று நாட்களில் மாற்று பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதும் RER B இன் அனைத்து வழக்கமான பயணிகளையும் சாலை வழியாக கொண்டு செல்வது சாத்தியமற்றது.

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 14 திங்கட்கிழமை அன்று ஊழியர்கள் பொதுப் போக்குவரத்தில் செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை உறுதிப்படுத்த நிறுவனங்கள், வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  பரிந்துரைக்கிறது.

நான்கு வழித்தடங்களில் (B2, B3, B4, B5) 600க்கும் மேற்பட்ட பேருந்துகள் குறிப்பிட்ட காலத்திற்கு மூடப்படும் நிலையங்களுக்குச் சேவையில் ஈடுபட்டன.

இல்-டி-பிரான்ஸ் பிராந்தியத்தில் வசிப்பவர்கள் அனைவருக்கும் கார் பூலிங் இலவசம் என அறிவிக்கப்பட்டது.

No comments