லாட்வியா பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்தார்
அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகளில் ஒன்றான பாட்டிக் நாடுகளில் உள்ள லாட்வியா பிரதமர் பதவி விலகுவதாக இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.
லாட்வியாவின் அரச அதிபரிடம் தங்கள் ராஜினாமாவை சமர்ப்பிக்க தானும் தனது அரசாங்கமும் திட்டமிட்டுள்ளதாக கிறிஸ்ஜானிஸ் கரின்ஸ் கூறியுள்ளார்.
ஆட்சியில் உள்ள மூன்று கட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டதையடுத்து, தனது கட்சி புதிய கூட்டணியை உருவாக்க முடியும் என்று கரீன்ஸ் நம்புகிறார்.
தற்போதைய கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகள் பிரதமரின் அவரது முன்மொழியப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பை நிராகரித்ததை அடுத்து அவர் பதவியிலிருந்து விலகினார்.
புதிய தேர்தல் அவரின் அரசாங்கத்தை மறு கட்டமைப்பு செய்ய உதவும் என கரீன்ஸ் நம்புவதாக கூறப்படுகிறது.
லாட்வியா பிரதமர் ஏன் ராஜினாமா செய்கிறார்?
கரீன்ஸ் தனது லிபரல்-கன்சர்வேடிவ் நியூ யூனிட்டி கட்சி, கன்சர்வேடிவ் நேஷனல் அலையன்ஸ் மற்றும் சென்டர்-ரைட் தேர்தல் கூட்டணி யுனைடெட் லிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளின் கூட்டணியின் தலைமையில் பிரதமராக உள்ளார்.
விவசாயிகள் மற்றும் பசுமைக் கூட்டணி மற்றும் இடதுசாரி சாய்ந்த முற்போக்கு கூட்டணியை ஆகிய கட்சிகளை தன்னுடைய கூட்டணிக் கட்சிகளுடன் இணைத்து புதிய கூட்டணியை விரிவுபடுத்துவதற்கு சில காலமாக அழுத்தம் கொடுத்து வருகிறார் கிறிஸ்ஜானிஸ் கரின்ஸ். இருப்பினும் மேலும் கூட்டணிக்கு கட்சிகளை இணைப்பதற்கு தற்போது அதரவு வழங்கும் பங்காளிகள் பலமுறை எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
கடந்த புதன் கிழமை இரு கட்சிகளும் மூன்று அமைச்சுப் பதவிகளுக்கான கரீன்ஸின் விருப்பத்திற்கு தமது ஒப்புதலை வழங்கவில்லைஇ மேலும் பல கொள்கைத் திட்டங்களுக்கான அவர்களின் ஒப்புதலையும் நிறுத்தி வைத்துள்ளன. தற்போதைய கூட்டணியுடன் இணைந்து பணியாற்றுவது அல்லது புதிய கூட்டணியை உருவாக்குவது ஆகியவற்றுக்கு இடையே ஒரு தேர்வை எதிர்கொண்டதாக கரீன்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இரு கட்சிகளும் திட்டமிட்ட வேலையை ஒரு பொதுநலக் கொள்கையையும், பொருளாதார வளர்ச்சியையும் தடுப்பதாகக் ட்வீட்டில் கிறிஸ்ஜானிஸ் கரின்ஸ் கூறினார்.
தனது கட்சி பிரதமர் பதவிக்கான வேட்பாளரை வரும் புதன்கிழமை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கரீன்ஸ் கூறினார்.
லாட்வியன் ஜனாதிபதி எட்கர்ஸ் ரிங்கெவிக்ஸ் அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கும் எந்தவொரு பிரதமருக்கும் ஒரு ஆணையை வழங்க வேண்டும். எந்தவொரு புதிய கூட்டணியும் பதவியேற்பதற்கு முன், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு அவசியமாகும்.
பாராளுமன்றத்திற்கான அடுத்த லாட்வியன் தேர்தல் 2026 வரை திட்டமிடப்படவில்லை. பால்டிக் நாடு ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுடனும் ஒரு எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
Post a Comment