பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக பொறுப்பேற்றார் ன்வார்-உல்-ஹக் கக்கர்



பாகிஸ்தானின் தேர்தல் நடத்தப்படும் வரை இடைக்காலப் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டார். 

பலுசிஸ்தான் மாகாணத்தின் முன்னாள் செனட்டரான அன்வார்-உல்-ஹக் கக்கர் பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

எதிர்வரம் 90 நாட்களுக்குள் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை அரசியலமைப்பு ரீதியாக மேற்பார்வையிடும் பாக்கிஸ்தானில் ஒரு இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக இன்று திங்கட்கிழமை அன்வார்-உல்-ஹக் கக்கர் பதவியேற்றார்.

பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பிரபலமான முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சர்ச்சைக்குரிய முறையில் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் 2022 இல் ஆட்சியைப் பிடித்த ஷெபாஸ் ஷெரீப்பின் ஒப்புதலுடன் கக்கார் ஆட்சியைப் பொறுப்பேற்கிறார்.

பாகிஸ்தானில் தேர்தல் காலத்துக்கு இடைக்கால அரச நிர்வாகம் நியமிக்கப்படுவது வழக்கம். பாராளுமன்றம் கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டதைத் தொடருந்து புதிய இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது.

யார் இந்த அன்வார் - உல் ஹக் கக்கர்?

2018 முதல் செனட்டில் பலுசிஸ்தான் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார்.

பலுசிஸ்தான் அவாமி கட்சியின் தலைவர் மற்றும் செனட்டர் பதவியில் இருந்து வந்தவர். இடைக்காலப் பிரதமராக பொறுப்பேற்க இருப்பதால் நேற்று அப்பொறுப்புக்களிலிருந்து விலகினார்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கான தற்காலிகப் பிரதமரின் திறனில் எனக்கு நம்பிக்கை உள்ளது பதவி விலகும் முன் முன்னாள் பிரதமர் ஷெரீப் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரியா விடை உரையில் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் இம்ரான் கானின் முன்னைய கூட்டணகிக் கட்சிகளின் பிளவுகள் நாட்டில் கூர்மையான பிளவுகளுக்கு முக்கிய பங்காற்றியது.

ஊழல் குற்றச்சாட்டின் பேரில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இம்ரான் கான், பதவியில் இருந்து ஐந்து ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து, பாகிஸ்தான் கணிசமான அரசியல் கொந்தளிப்பின் பிடியில் உள்ளது.

இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) கட்சியை அடக்குவதற்கு சமீபத்திய மாதங்களில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மற்றும் அதிகாரிகளை தடுத்து வைத்துள்ளனர்.

இ்ம்ரான் கான் அவரது தண்டனையை மேல்முறையீடு செய்துள்ளார். அவர் தற்போது தேர்தலில் போட்டியிட முடியாது என்ற போதிலும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஷெரீப்பின் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு வலுவான போட்டியாக இருக்கும்.

பாகிஸ்தானும் சமீபத்திய ஆண்டுகளில் பொருளாதார கொந்தளிப்பில் உள்ளது, பரவலான ஊழல், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் இயற்கை பேரழிவுகள் அனைத்தும் அதன் பொருளாதாரத்தை கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றன.

ஜூலை மாதம், சர்வதேச நாணய நிதியம் 3 பில்லியன் டாலர் (2.7 பில்லியன் யூரோ) பிணை எடுப்புப் பொதிக்கு ஒப்புதல் அளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments