கோப்பாயில் விபத்து - பெண் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் - கோப்பாய் சந்தியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - டிப்பர் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் சமூர்த்தி வங்கியின் முகாமையாளரான கோப்பாய் தெற்கைச் சேர்ந்த கௌரிமலர் (வயது 52) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments