இந்தியாவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவு, மேக வெடிப்பில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு


இந்தியாவின் வடக்கே அமைந்துள்ள இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் குறைந்தது 22 பேர் உயிரிழந்தனர்.

சோலன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மேக வெடிப்பில் நான்கு குழந்தைகள் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

இதேநேரம் சிம்லா நகரல் பெய்த கனமழையால் சிம்லாவின் சம்மர் ஹில்லில் உள்ள ஒரு இந்துக் கோயிலை அடித்துச் சென்ற நிலச்சரிவில் மேலும் ஒன்பது பேர் இறந்தனர்.

மலைகள் சூழ்ந்த இமாச்சலப் பிரதேசத்தில் 55 மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையால் அப்பகுதியில் பிரதேசங்களில் பேரழிவை ஏற்படுத்தியது.

மாநிலத்தின் பல பகுதிகளில் 24 மணி நேரத்தில் 273 மிமீ (10.75 அங்குலம்) மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments