இலங்கையில் மின்வெட்டு இல்லையாம்!

 


வறட்சியான காலநிலை நிலவுகின்ற போதிலும் மின்வெட்டுக்கள் இன்றி தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தொடர் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர்  தெரிவித்தார். 

இதேவேளை தற்போது செயலிழந்துள்ள நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் 2 ஆவது இயந்திரத்தை எதிர்வரும் செவ்வாய்கிழமைக்குள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும்.

நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் 03 மின் உற்பத்தி இயந்திரங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று தற்போது பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, அந்த ஆலையில் தற்போது ஒரு ஜெனரேட்டர் மட்டுமே இயங்கி வருகிறது. 

இதேவேளை, தென் மாகாணத்தில் மின் பரிமாற்ற கட்டமைப்பின் கொள்ளளவை அதிகரிக்கும் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 05 நாட்களுக்குள் நிறைவு செய்யப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பணிகளை பொறுப்பேற்றுள்ள  சீன நிறுவனத்தின் பிரதிநிதிகளும்   இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர்  தெரிவித்தார்.

No comments