திருட்டு குழு மட்டுமே மிச்சம்!யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த வறுத்தலைவிளானில் உள்ள இரண்டு முகாம்கள், காங்கேசன்துறை நடேஷ்வராக் கல்லூரி வீதி இராணுவ முகாம் என்பன அகற்றப்பட்டுவருகிறது. 

அத்துடன் மாங்கொல்லை இராணுவ முகாமும்  அகற்றப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியுள்ளன. இந்நிலையில் இந்த இராணுவ முகாம் அமைந்திருந்த காணிகளை உடனடியாக கையளிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தற்போது இராணுவத்தினர் மக்களின் காணிகளில் இருந்து  வெளியேறிவரும் நிலையில் திருட்டு குழு அங்கு எஞ்சியிருக்கும் பொருட்களை திருடும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

No comments