ரணிலுடன் மைத்திரி கூட்டு!ஜனாதிபதி ரணில் தலைமையில் அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள மொட்டுக்கட்;சி தலைவர்கள் பின்னடிக்க தொடங்கியுள்ளனர்.

இ;ந்நிலையில் மொட்டுக்கட்சியையும் இரண்டாக உடைத்து ஜக்கிய மக்கள் சக்தியிலிருந்தும் ஆட்களை இணைத்து தேர்தலை எதிர்கொள்ள ரணில் தயாராகியுள்ளார்.

இந்நிலையில் ரணில்  அரசுடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுதந்திர மக்கள் சபையின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது அரசுடன் இணையவுள்ளீர்களா என டலஸ், எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, தனக்கு அவ்வாறானதொரு எண்ணம் இல்லை என மைத்திரி தெரிவித்துள்ளார்.

ஏனினும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கவேண்டுமென்ற நிபந்தனையுடன் மைத்திரி ஆதரவளிக்க பேரம் பேசியுள்ளார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments