ஒரு நாளில் மட்டும் கொண்டாடுவோமா:சஜித்?

 


வெறும் வார்த்தைகளோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் உண்மையிலேயே பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பயணத்திற்காக அணிதிரள்வோம் என அழைப்பு விடுத்துள்ளார் சஜித் பிறேமதாசா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச .

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில் முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், பெண்களின் உரிமையை ஒரே ஒரு நாளில் மட்டும் கொண்டாடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், 24 மணி நேரமும் வருடத்தின் 365 நாட்களும் பெண்களின் உரிமைகளை வெற்றிகொள்ளும் நாடாக நமது நாட்டை மாற்றுவதற்கு நாமானைவரும் அர்ப்பணிப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மகளிர் சக்தியும் இணைந்து “தேசத்தைக் கட்டியெழுப்பும், அவளைப் பாதுகாப்போம், 

ஐக்கிய மகளிர் தினம்” எனும் கருப்பொருளில் இன்று (08) கொழும்பு தாமரைத் தடாக  அரங்கு வளாகத்தில் ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்

No comments