வெடி விபத்தில் ஜன்னல் வழியாகப் பறந்தன காகிதங்கள்


டோக்கியோவின் ஷிம்பாஷி வர்த்தக மாவட்டத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த வெடிவிபத்தில் ஜன்னல்கள் கண்ணாகள் உடைந்து காகிதங்கள் சிதறி ஜன்னல் வழியாக வீதிகளில் பரவி விழுந்தன. அத்துடன் புகை மூட்டமும் எழுந்தது தீயால் கட்டிடம் எரிந்தது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:20 மணியளவில் (0620 UTC) பரபரப்பான உணவகப் பகுதியில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஷிம்பாஷி மத்திய டோக்கியோவில் வணிக மற்றும் பொழுதுபோக்கு மாவட்டமாக அறியப்படுகிறது.

அவசர அழைப்பு கிடைத்ததையடுத்து காவல்துறையினர் தீயணைப்பு வீரர்கள், அவசர மீட்பு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

No comments