அனுரவிடம் முறைப்பாடு செய்வோம்!
மதகுருமார்கள் யாராகிலும் அவர்கள் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் நடாத்தப்பட வேண்டும். பொலிஸார் மக்களின் மனநிலை அறிந்து செயற்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் வேலன் சுவாமிகள் நடாத்தப்பட்ட விதம் முறையற்றது. நடந்த சம்பவம் தொடர்பாக வீடியோவை பார்த்தேன். அது பிழை என்பது தெளிவாகிறது. ஜனாதிபதிக்கு தெரிவிப்பேன் என அனுர அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார்.
அநுர அரசில் இவ்வாறான சம்பவங்களை சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அனுர அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் தெரிவித்துள்ளார்.

Post a Comment