ஒரு கோடி அப்பு?

 


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளை வழங்கி ரணில் விக்ரமசிங்கவை இந்நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான காலத்தில் நாட்டை வழிநடத்தி நாட்டைக் காப்பாற்றிய தேசியத் தலைவர் அவர் என்றும், அந்தத் தேசியத் தலைமையைப் பேணுவது மக்களின் பொறுப்பு என்றும் அவர் கூறுகிறார்.

ஏக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரணில் விக்கிரமசிங்க முழு நாட்டின் எதிர்காலத்தையும் பொறுப்பேற்று அதனைப் பாதுகாத்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No comments