புதைக்குழி:தொல்லியல் திணைக்களத்தை காணோம்!



முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்காக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவவினால் புதைகுழி அகழ்வுக்கான செலவு குறித்த உத்தேச பாதீடு இன்று தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே தொல்பொருள் திணைக்களமும் அகழ்வில் ஈடுபடும் போது அதற்கான பாதீட்டை தாக்கல் செய்யுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று(20) முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதிபதி ரி. பிரதீபன் முன்னிலையில் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பாதீடு தொடர்பிலான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சட்டவைத்திய அதிகாரி வாசுதேவவினால் புதைகுழி அகழ்வுக்கான செலவு குறித்த உத்தேச பாதீடு தாக்கல்செய்யப்பட்டிருந்தது. 

இதனிடையே அகழ்வு பணியை மேற்கொள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணத்துடன், ராஜ் சோமுதேவா ஆகியோரை நீதிமன்றம் அழைத்திருந்தது.எனினும்  தொல்பொருள் திணைக்களம் சார்பில் அவர்கள் எவரும் இன்று நீதிமன்றில் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments