ரணிலை தடுத்தால் சாம்,சுமாவை விடமாட்டோம்!



கடந்த கால ஜனாதிபதி ஆட்சிமுறையில் தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ள பொன்னான சந்தர்ப்பம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆவார்.

அவருக்கு தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைக்க நினைத்தாலும், அதனை குழப்பும் வகையில் தமிழ் தலைமைகள் செயற்படுவதாக, ஈழவர் ஜனநாயக முன்னணியான ஈரோஸின் செயலாளர் நாயகம் க.பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகள் எடுக்கும் நிலையில், அதில் குழப்பங்கள் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பினை இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனுமே ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும்; ரணில் விக்ரமசிங்க ''தான் ரணில் ராஜபக்ச இல்லை'' என்று சொல்வது அவரது இயலாத் தன்மையை காட்டுவதாகவும், பௌத்த பேரினவாத சக்திகளுக்கு அஞ்சுவதை வெளிப்படுத்துவதாகவும்; சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனிடையே இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவாகி இன்றுடன் ஒருவருடம் பூர்த்தியாகின்றது.

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம், புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கரமசிங்க கடந்த வருடம் தெரிவு செய்யப்பட்டார்.

அதேவேளை, ஒரு வருட பூர்த்தியின் பின்னரே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அயல்நாடான இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments