அடுத்து மதுரைக்கு பறக்கலாம்!



காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமிடையிலான கப்பல் சேவைகள் தொடர்பில் இந்திய அரசு தொடர்ந்தும் பின்னடிப்புக்களை செய்துவருகின்றது.

இந்நிலையில் மதுரை - யாழ்ப்பாணம் இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமான சேவைகள் அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக  செய்தி வெளியாகியுள்ளது.

அவ்விமான சேவையை வாரத்திற்கு 7 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை - கொழும்பு இடையேயான முதலாவது சர்வதேச விமான சேவை 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது மதுரையிலிருந்து நாளாந்தம் கொழும்பிற்கான நேரடி விமான சேவையை சிறீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகின்றது.

ஏற்கனவே பலாலிக்கும் சென்னைக்குமிடையிலான விமான சேவை நாளாந்த சேவையாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை - யாழ்ப்பாணம் இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.


No comments