வரணியில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு ; நண்பனை வீட்டில் இறக்கி விட்டு வரும் போதே விபத்தில் சிக்கினார்.


நண்பனை வீட்டில் இறக்கி விட்டு , தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருத்தவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் , கொடிகாமம் , வரணி சுட்டிபுரம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் , வடமராட்சி தேவரையாளி பகுதியை சேர்ந்த புஸ்பராசா ராஜ்குமார் (வயது 30) என்பவரே உயிரிழந்துள்ளார். 

சாவகச்சேரியை சேர்ந்த நண்பனை அவரது வீட்டில் இறக்கி விட்டு , மோட்டார் சைக்கிளில் வடமராட்சியில் உள்ள தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த வேளை சுட்டிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து , வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி, விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments