மானிப்பாயில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு


யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. 

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில் , அதன் உரிமையாளர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குழி ஒன்றினை தோண்டிய போதே அதனுள் ஆயுதங்கள் காணப்பட்டுள்ளன. 

அதனை அடுத்து , மானிப்பாய் பொலிஸாருக்கு , காணி உரிமையாளர் அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குழியினை மேலும் தோண்டி ஆயுதங்களை மீட்டனர். 

அதன் போது குழிக்குள் இருந்து T 56 ரக துப்பாக்கிகள் நான்கும் , அவற்றுக்கு உரிய ரவைக்கூடுகள் (மகசீன்கள்) மற்றும் ஒரு தொகை ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. 

குறித்த ஆயுதங்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு , துருப்பிடித்த நிலையில் காணப்படுகின்றன எனவும் , அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். No comments