மரியதாஸ் மாஸ்ரர் காலமானார்


யாழ்ப்பாணம் சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வின்சென்ற் வில்லியம் மரியதாஸ் (மாஸ்ரர்) நேற்று (27.06.2023) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னாரின் அறுதி ஆராதனை இன்று (28.06.2023) புதன்கிழம பி.ப 3.00 மணியளவில் சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடன் நல்லடக்கம் செய்யப்படும்.

தமிழர் தாயக விடுதலைப்போராட்டத்தில் தமிழர் விடுதலைக்காக அவர்  ஆற்றிய முக்கிய பணிக்காக  பல ஆண்டுகள் சிறைவாசம் இருந்தவர். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும்  மீண்டும் போராட்டத்தில் தன்னை முழுமையாக இணைத்து முள்ளிவாய்க்கால் வரை தனது பணியைத் தொடர்ந்தார். போரின் முடிவில் முள்ளிவாய்க்காலில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு மீண்டும்  சிறை சென்று புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின் விடுதலையானர்.

No comments