பிரான்சில் 17 வயது இளைஞன் சுட்டுக்கொலை: ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையினர் மோதல்!!


பாரிசின் புறநகர் பகுதியான நான்டெர்ரேயில் (Nanterre) 17 வயது டெலிவரி டிரைவர் ஒரு போலீஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் வீதிக்கு இறங்கிப் போராட்டத்தில் குதித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புகளை தீ வைத்து எரித்தனர் . இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களும் காவல்துறையினரும் மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீதினர்.

டெலிவரி ஓட்டுநர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி, கொலைக் குற்றச்சாட்டின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று நான்டெர்ரே வழக்கறிஞர்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் கண்காணிப்பு அமைப்பு (ஐபிஜிஎன்) உள் விசாரணையை தொடங்கியுள்ளது பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மான் கூறினார்.

செவ்வாய்கிழமை மாலை Nanterra காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய வன்முறை, அண்டை நகரங்களுக்கும் பரவியது.

மாண்டஸ்-லா-ஜோலியில், ஒரு நகர மண்டபம் எரிக்கப்பட்டது. காவல்துறையினர் கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தினர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வாங்கினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துஐற அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments