வடக்கிலும் பாதாள உலக கும்பல்களா?

 


இலங்கையின் வடபுலத்திலும் பாதாள உலக கும்பல்கள் பாணியில் யுத்த கால ஆயுதக்குழுக்கள் தலைதூக்க தொடங்கியுள்ளன.

அவ்வகையில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காரில் பயணித்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த காரின் சாரதி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி – உதயநகர் பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவரே காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் உள்ளிட்ட மேலும் இருவர் கனகபுரம் பகுதிக்கு காரில் சென்ற போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக சந்தேக நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணம் தென்மராட்சி மறவன்புலவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிமருந்துப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கை இராணுவத்திற்கு கிடைத்ததகவலின் அடிப்படையில் நேற்று மாலை 5 மணியளவில் வெடிமருந்துப் பொருட்கள் மீட்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


No comments