காவடியெடுக்கிறார் மைத்திரி!

 


அடுத்து ஆண்டு இடம்பெறலாமென எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மீண்டும் மைத்திரிபால சிறிசேன முற்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனது ஆதரவு பிரச்சாரங்களிற்காக அவர் யாழிற்கு பயணம் செய்யவுள்ளார்.

சிறீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பெயரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மைத்திரிபால சிறிசேனா, நாளை வியாழக்கிழமை(29) முதல் மூன்று நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பல்வேறு பொது நிகழ்வுகளிலும்,சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.

யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயருடனான சந்திப்பு, ஆரியகுளம் நாக விகாரை வழிபாடு, நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாடு, யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் வழிபாடு, இந்து மத தலைவர்களுடனான சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதுடன் உடுப்பிட்டி மகளீர் கல்லூரிக்கு விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விடுவிக்கப்பட வேண்டிய காணிகளின் உரிமையாளர்களுடனான சந்திப்பு, மற்றும் தனது ஆட்சிக்காலப் பகுதியில் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்வையிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


No comments