இறால் பண்ணைக்கு அமைக்கப்பட்ட சட்டவிரோத மின் வேலியில் சிக்கி கடற்தொழிலாளர் உயிரிழப்பு!


இறால் பண்ணைக்கு பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி கடற்தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மட்டக்களப்பு ஓட்டமாவடியை சேர்ந்த முத்துவான் அன்சார் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார். 

ஓட்டமாவடி ஆற்றில் உள்ள ஆமை ஓடை குடா பகுதியில் இறால் பண்ணை அமைந்துள்ள தனியார் ஒருவர் இறால் பண்ணை பாதுகாப்புக்கு என சட்டவிரோதமான முறையில் மின்சார வேலியை அமைத்துள்ளார். 

இந்நிலையில் , குறித்த பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த கடற்தொழிலாளர் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

இதேவேளை குறித்த சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி இதுவரையில் யானை ஒன்றும் மூன்று கால் நடைகளும் இறந்துள்ள போதிலும் குறித்த நபருக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்காத நிலையிலையே நேற்றைய தினம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என ஊரவர்கள் குற்றம் சாட்டு கின்றார்கள். 

No comments