யாழில். ஐஸ் போதைப்பொருள் நுகர்ந்த இளைஞன் உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் அதிகளவான ஐஸ் போதை பொருளை நுகர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். 

பண்டத்தரிப்பை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு ஐஸ் போதை பொருளை நுகர்ந்த நிலையில் , அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. 

அதனை அடுத்து அவரை சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார். 

No comments