அதிரடிப்படை உதவியுடன் சித்திரவதை!முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிழவன்குளத்தில் வசிக்கும் நவரத்தினம் நவரூபன் என்பவரது வீட்டிற்கு கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 4 விசேட அதிரடிப் படையினரின் துணையுடன் சென்ற வனசீவராசிகள் திணைக்களத்தினர் ஏழு பேர், நவரூபனை கைதுசெய்து, கட்டிவைத்து அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

அதன் பின்னர் பொய்க்குற்றச் சாட்டுக்களை சுமத்தி நீதிமன்றில் முற்படுத்தி 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க முயன்றுள்ளனர்.

எனினும் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். சித்திரவதை செய்யப்பட்டு கடுங்காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நவரூபன்

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

No comments