சீனா பயணிக்கிறார் அமைச்சர் அலி சப்ரி


கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து, விசேட பேச்சு வார்த்தையை முன்னெடுப்பதற்காக அடுத்த வாரம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சீனா செல்லவுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை பூர்த்திசெய்யவேண்டியுள்ள நிலையில், அதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வினவியபோதே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.

No comments