யாழ்.நோக்கி வந்த ஹயஸ் மாங்குளத்திற்கு அருகில் விபத்து - 07 பேர் படுகாயம்!


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் இன்றைய தினம் திங்கட்கிழமை  அதிகாலை விபத்தில் சிக்கியதில் 07 பேர் காயமடைந்த நிலையில் , கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் கனகராஜன் குளத்திற்கும் , மாங்குளத்திற்கும் இடையில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் சிக்கியவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

 சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments