சோமாலியாவில் அல்-ஷபாப் தாக்குதலில் 54 உகண்டா படையனிர் பலி!


சோமாலியாவில் அல்-ஷபாப் என்ற ஜிகாதிப் போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 54 உகண்டா நாட்டைச் சேர்ந்த அமைதிகாக்கும் படையினர் கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் கடந்தவாரம் சோமாலியாவில் உள்ள ஆபிரிக்க யூனியனின் அமைதிப்படையினரின் தளத்தை முற்றுகையிட்டுத் தாக்கியதில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 54 உகண்டா நாட்டு அமைதிகாக்கும் படையினர் கொல்லப்பட்னர்.

அத்துடன் அல்-ஷபாப் போராளிகளால் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை அழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

TMIS எனப்படும் ஆபிரிக்க யூனியன் படையால் ஆதரிக்கப்படும் அரசாங்க சார்புப் படைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அல்-ஷபாபுக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கியதில் இருந்து இதுவரை ஏற்பட்டுள்ள எண்ணிக்கை மிகவும் அதிகமானதாகும்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சோமாலியாவின் பலவீனமான மத்திய அரசாங்கத்திற்கு எதிராக கொடிய கிளர்ச்சியை நடத்தி வரும் அல்-ஷபாப், மே 26 தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அவர்கள் தளத்தை கைப்பற்றி 137 வீரர்களைக் கொன்றதாகக் கூறியது.

தலைநகர் மொகடிஷுவில் இருந்து தென்மேற்கே 120 கிலோமீட்டர் (75 மைல்) தொலைவில் உள்ள பூலோ மாரரில் உள்ள தளத்திற்குள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை தீவிரவாதிகள் ஓட்டிச் சென்று வெடிக்க வைத்ததன் பின்னர் துப்பாக்கிச் சண்டைக்கு வழிவகுத்தது என்று உள்ளூர்வாசிகளும் சோமாலிய இராணுவத் தளபதி கூறினார்.

இதனை உகாண்டாவின் ஜனாதிபதி யோவேரி முசெவேனியும் உறுதி செய்துள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட சோமாலிய நாட்டில் அல்-ஷபாப் ஜிஹாதிகளின் மிக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்று என அவர் குறிப்பிட்டார்.

சுமார் 800 பேர் அடங்கிய போராளிக்குழு தாக்குதல் நடத்தியதால் அங்கிருந்து படையினர் பீதியடைந்ததால் எதிர்ப்பார்த்தபடி எதிர்த்தாக்குதலை நடத்தமுடியவில்லை என்று முசெவேனி கூறினார்.

அத்துடன் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்களை அழிப்பதற்கான ஒரு நல்லவாய்ப்பை அவர்கள் தவறவிட்டுவிட்டனர் என்று வருத்தம் முசெவேனி தெரிவித்தார்.

இந்தத் தவறை இரண்டு தளபதிகளான மேஜர் ஒலுகா மற்றும் மேஜர் ஒப்போ செய்தார்கள். அவர்கள் வீரர்களை பின்வாங்க உத்தரவிட்டனர் என்று முசெவேனி கூறினார்.

வர்கள் இராணுவ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார்கள் என்று கூறினார்.

இருப்பினும் எங்கள் வீரர்கள் குறிப்பிடத்தக்க பின்னடைவை சந்தித்த பின்னர் தங்களை மறுசீரமைத்து எதிர்த் தாக்குதலை நடத்தியன்  விளைவாக தளம் மீண்டும் கைப்பற்றப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

ஆபிரிக்க யூனியன் படைக்கு துருப்புக்களை வழங்கும் நாடுகளின் அரசாங்கங்கள் தங்கள் நாட்டின் படையினரின் உயிரிழப்புகளை அரிதாகவே உறுதிப்படுத்துகின்றன.

No comments