கனடாவில் ஈழம்:சரத் ஆலோசனை!

 


இலங்கையை காட்டிலும் கனடா பாரிய நிலப்பரப்பை கொண்டுள்ளது.ஈழத்தமிழர்கள் தொடர்பில் கடனாவின் பிரதமருக்கு உண்மையில் கரிசனை,அக்கறை காணப்படுமாக இருந்தால் கனடாவில் ஈழ இராச்சியத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம் என முன்னாள் இராணுவ அதிகாரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கனடாவில் வாழும் இலங்கை தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கத்துடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ இலங்கை தொடர்பில் தவறான கருத்தை தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் தொடர்பில் அவருக்கு உண்மையில் கரிசனை இருக்குமாயின் கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம்.

மனித உரிமைகள் என்ற போர்வையில் விடுதலை புலிகள் அமைப்பின் இலக்கை அடைய டயஸ்போராக்கல் செயற்படுகிறார்கள் என  ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

புலம் பெயர்ந்து வாழும் டயஸ்போராக்கல் மனித உரிமைகள் என்ற போர்வையில் விடுதலை புலிகள் அமைப்பின் நோக்கத்தை அடைய முயற்சிக்கிறார்கள்.இதற்காக ஐரோப்பிய நாடுகள் ஊடாக அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.

கடனாவில் புலம் பெயர் தமிழர்கள் வளம் பெற்றுள்ளார்கள்.இவர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்வதற்காகவே  கடனாவின் பிரதமர் இலங்கை தொடர்பில் முறையற்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் ஈழத்தை கோரவில்லை.தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரம் தான் இன்றும் ஈழத்துக்காக போராடுகிறார்கள்.

நாடு முழுவதும் தமிழர்கள் சிங்களவர்களுடன் வாழ்கிறார்கள்.எங்கும் பிரச்சினையில்லை.அரசியல்வாதிகள் மாத்திரமே பிரச்சினைகளை உருவாக்கி குறுகிய இலாபம் பெறுகிறார்கள் எனவும் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


No comments