பெல்கொரோட் தாக்குதல்: 70 உக்ரைனிய தாக்குதலாளிகள் பலி!!
உக்ரைனின் பாக்முட் நகரம் ரஷ்யர்களின் கைகளில் வீழ்ந்ததை அடுத்து, உக்ரைகின் உளவு அமைப்பால் வழிநடத்தப்பட்ட புடினுக்கு எதிரான ரஷ்யக் குழு (கிரெம்ளின் ஃப்ரீடம் ஆஃப் ரஷ்யா லெஜியன்) ரஷ்யாவின் பெல்கொரோட் பிரதேசத்தில் நேற்று தாக்குதல் நடத்தினர்.
பெல்கிரோட்டில் இரு கிராமங்களில் மக்கள் வதிவிடங்களை அவர்கள் தாக்கினர்.
இதையறிந்த ரஷ்யப் படைகள் அவர்களை விரட்டும் தாக்குதலை தொடுத்தனர். எல்லைதாண்டி நாசவேலை செய்யும் உக்ரைனால் வழிநடத்தப்படும் இக்குழுவைச் சோ்ந்த 70க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 4 கவசவாகனங்கள், 5 பிக்கப் வாகனங்கள் அழிக்கப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
அவர்களை வெளியேற்ற போர் விமானங்களால் வான்வெளித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தி அவர்களை அழித்ததாக ரஷ்யா கூறியது.
உக்ரைனிய நாசவேலை மற்றம் உளவு அமைப்பினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் ரஷ்யத் தரப்பில் 13 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொசின்கா கிராமத்தில் இரண்டாவது பொதுமகன் கொல்லப்பட்டதாகவும் ரஷ்யா அறிவித்தது.
Post a Comment