பாட்டலி தலைமையில் புதிய அரசியல் கட்சி?


நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ஐக்கிய குடியரசு முன்னணி எனும் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய கட்சி இன்று மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய குடியரசு முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு பொருளாதாரம் , இராஜதந்திர, ஜனநாயக சுதந்திரம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை வழங்குவதோடு மக்களின் திறமைகளை பயன்படுத்தி கூட்டு முயற்சிகளின்  மூலம் நாட்டை கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களில் ஈடுபடுவதே இந்த கட்சியின் நோக்கம் என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments