ஐந்து நாள் விஜயமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு செல்கின்றார் ஜனாதிபதி


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் திங்கட்கிழமை ஐந்து நாள் விஜயமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செய்யவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம், கடன் மறுசீரமைப்பு , முதலீட்டு வாய்ப்புகள் போன்ற விடயங்கள் குறித்தும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பானிய தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாட உள்ளார்.

குறித்த பயணத்தின் போது, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) மற்றும் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா (Fumio Kishida) ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

இந்தநிலையில் குறித்த விஜயங்களை முடித்துக்கொண்டு ஜனாதிபதி எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments