கோட்டாபய "சனியன்" கைவிட்டது!ஒரு இடம் தவறவிட்டோம், அன்றும் சொன்னேன் இன்றும் சொல்கிறேன். அதுவே இதுவரை அரசியல் செய்யாத கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமை என பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

“..அந்தத் தவறுக்குப் பிறகு கட்சிக்குள் சுயவிமர்சனத்துக்குச் சென்று, இனி அந்தத் தவறைச் செய்யமாட்டோம் என்ற முடிவுக்கு வந்தோம். அரசியல் செய்யாத ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக வரமாட்டார் என்ற முடிவுக்கு வந்தோம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்..”


No comments