காலை வாரிய மருத்துவர்கள்!
இலங்கை முழுவதும் தொழிற்சங்ககள் அழைப்புவிடுத்த போராட்டத்தினால் கல்விச்செயற்பாடுகள் முற்றாக முடக்க நிலையினையடைந்துள்ளன.இதனிடையே இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் வவுனியா மத்திய பேருந்து நிலையங்களின் முன்பதாக ஆர்ப்பாட்ட போராட்டங்களை நடாத்தியுள்ளனர்.
சம்பள அதிகரிப்பை வழங்க கோரியும், வரி அறவீட்டினை நிறுத்த கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் சங்க போராட்;டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் பதாகைகளை தாங்கியவாறு உதவித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு சம்பளத்தை வழங்க வேண்டும்., மாணவர்களின் போதனை குறைபாட்டை நிவர்த்தி செய்யவேண்டும் மற்றும் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கவேண்டுமென பல்வேறு பதாகைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதனிடையே ஆசிரியர் சங்கத்தினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டன.
பாடசாலைக்கு வருகை தந்திருந்த மாணவர்களும் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமையினால் வீடுகளுக்கு திரும்பிச் சென்றிருந்தனர்.
மறுபுறமாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் பணிப்புறக்கணிப்பை நாளை முதல் தற்காலிகமாக கைவிடுவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி நாளை (16) காலை 8 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தினால் தொழில் வல்லுநர்கள் சங்கத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைய போராட்டத்தை கைவிடும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
Post a Comment