ஆட்களற்ற கஞ்சா மீட்பு?மீண்டும் வடக்கில் ஆட்களற்ற வகையில் கஞ்சாவை இலங்கை படைகள் மீட்கத்தொடங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் மாதகல் கடற்கரையில் 4 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினர் நேற்று மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, ​​சந்தேகத்துக்கிடமான 4 பைகளில் 55 பொதிகள் பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவை கேரள கஞ்சா என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் எடை 126 கிலோவுக்கும் அதிகமாகும்.

No comments