நீதித்துறையின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்தினால் பாரதூரமான விளைவு ஏற்படும்


உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையுத்தரவை ஆளும் தரப்பினர் நாடாளுமன்ற சிறப்புரிமை ஊடாக விமர்சிப்பது முற்றிலும் தவறானது என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

நீதிபதிகளை நாடாளுமன்ற சிறப்புக்குழுவுக்கு அழைத்து அவர்களை விசாரணை செய்தால் நாட்டில் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்றும் ஆகவே நீதித்துறை சவாலுக்குட்படுத்தி அரசியலமைப்பை மலினப்படுத்துவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த பிரேரணையை செயற்படுத்த வேண்டுமாயின் உள்ளூராட்சித் தேர்தல் குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள ரிட் மனுக்கலை இடைநிறுத்த வேண்டும் என்றும் வழக்குகள் தொடர்பாக கட்டளை பிறப்பிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

நீதிபதிகளை கேள்வி கேட்டால் சர்வதேச மட்டத்தில் பாரிய நெருக்கடிளை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்றும் நாட்டு மக்களும் நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டத்துறையை கடுமையாக விமர்சிப்பார்கள் என்றும் ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

No comments