அடித்து சொன்னராம் அர்ஜீன்!

 



இலங்கை ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல இரத்னநாயக்க இந்திய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் சந்தித்துள்ளதாக ஈழம் சிவசேனை தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளார். 

பாதுகாப்பு ஆலோசகருடனான சந்திப்பின் போது அர்ஜுன் சம்பத் இலங்கையின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் எப்பொழுதும் இந்தியா பேணும் பாதுகாக்கும் வளர்க்கும்.  இந்தியாவின் இன்றைய அயல் நாடு முன்னுரிமைக் கொள்கையால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு வற்றாத உதவி கிடைக்குமென வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவை ஆளுகின்ற அரசு இலங்கையின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்றால் இலங்கையில் இந்துக்களுக்கு இலங்கை அரசு முன்னுரிமையும் சம வாய்ப்பு மேன்மையும் கொடுக்க வேண்டும். இந்துக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கைத் திட்டத்தை அரசு வகுக்க வேண்டும். யாழ்ப்பாண கலாச்சார நிலையத்துக்கு கடந்த வாரம் சரஸ்வதி மண்டபம் என பெயர் சூட்டியமையே இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்கின்ற இந்துக்களுக்கு மகிழ்ச்சி. அவ்வாறே கடந்த தீபாவளி நாளன்று குடியரசுத் தலைவர் அலுவலக வளாகத்தில் நந்திக்கொடியைப் பறக்க விட்டு இலங்கை இந்துக்களையும் இந்திய இந்துக்களையும் மகிழ்வித்தீர்கள். இவ்வாறு மாதந்தோறும் இந்துக்களுக்கான ஒரு எழுச்சி நிகழ்ச்சியை முன்னெடுத்துச் செல்வீர்கள் ஆனால் உங்கள் குரலுக்கு இந்தியா செவி சாய்க்கும். 


இலங்கையில் இந்துக்களின் எண்ணிக்கை முன்பு 24விழுக்காடாக ஆகவுள்ளது.  இப்பொழுது 12.விழுக்காடாக குறைந்துள்ளது. இந்துக்கள் விகிதாசாரம் மேலும் குறையாமல் இருப்பதற்கு இலங்கை அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வடக்கே திருக்கயிலாயத்திலிருந்து தெற்கே கதிர்காமம் வரை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஊடாக பழமையான நிலப்பகுதியின் ஒரு பகுதியே இந்து சமய நாடான இலங்கை. புதிதாக உருவாக்க உள்ள இலங்கை அரசியலமைப்பு விதிகளில் இந்து சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்ற விதியையும் சேர்க்கவேண்டுமெனவும் அர்ஜீன் சம்பந் தெரிவித்துள்ளார்.


No comments