நோயாளிகளிற்கு கழிவு குடிநீர்?
வடமாகாணத்தினில் பொதுமக்களிற்கு இலவச மருத்துவ சேவையினை வழங்கிவரும் யாழ்.போதனா வைத்தியசாலை குடிதண்ணீரில் கிருமித்தொற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர் கிருமி தொற்று தொடர்பில் தகவல் வெளியிடமறுத்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையின் குடிநீரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் தண்ணீர் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் யாழ். அலுவலகத்தில் பரிசோதனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் மாவட்ட பொறியியளாளர் அவ்விடயம் இரகசியமானது.யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அனுமதித்தால் மட்டுமே வெளியே தகவல்களை வெளிப்படுத்துவேன் என பதிலளித்துள்ளார்.
யாழ்.நகரின் மத்தியை ஆக்கிரமித்து எந்தவொரு திட்டமிடலுமின்றி யாழ்.போதனா வைத்தியசாலை கட்டுமானங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் நிலத்தடி நீர் மாசடைவதால் மோசமான பாதிப்பினை யாழ்.போதனாவைத்தியசாலை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment