இலங்கை நேவியிடம் அனுமதி பெறவேண்டும்!

 


இலங்கை-இந்திய யாத்திரீகர்கள் பங்கெடுக்கும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏதிர்வரும் 03 ஆந் திகதி முதல் அரச பேரூந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் வரை சேவையில் ஈடுபடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிகட்டுவானில் இருந்து பயணிக்கமுடியுமெனவும் வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழா எதிர்வரும் மார்ச் 03 மற்றும் 2023.03.04 ஆந் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பில் யாழ் ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, நெடுந்தீவு பிரதேசசெயலகம் ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments