தப்பியோடிய மகேஸிற்கு ஒரு கதிரை!
ஜனாதிபதி கதிரையை தக்க வைக்க இலங்கை பாதுகாப்பு அமைச்சினை தனது கைகளுள் வைத்துக்கொள்ள ரணில் தயாராகிவருகின்றார்.
அவ்வகையில் முப்படைகளது தலைவரான ஜெனரல் கமல் குணரத்னவை அவரது பதவியில் இருந்து நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் நீடித்துவரும் கமல் குணரத்ன போராட்டகாரர்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தற்போது அவர் மீது முன்வெக்கப்பட்டுள்ளது.
போராட்டம் நடைபெற்ற காலத்தில் போராட்டகாரர்கள் அதிபர் மாளிகை, அலரி மாளிகை, அதிபர் செயலகம் உட்பட அரசின் உயர்மட்ட இடங்களுக்குள் புகுந்திருந்தனர்.
இதன் காரணமாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு தரப்பினர் ஊடாக இதனை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, ஓய்வுபெற்ற இராணுவ தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலின் போது கோத்தபாயவிற்கு எதிராக மகேஸ் சேனநாயக்க களமிறக்கப்பட்டிருந்தார்.எனினும் படுதோல்வியடைந்த அவர் பாதுகாப்பு அச்சுறுத்தலையடுத்து நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
Post a Comment