சிங்களவருக்கு ஒரு கோடியாம்!படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதேபோல், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கைகள் தென்னிலங்கை சிவில் செயற்பாட்டாளர்களிடமிருந்து எழுந்துள்ளது.

காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு” என்ற தலைப்பில் கடந்த நவம்பர் 30ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ, அரச அமைச்சர் விஜேதாச ராஜபக்விற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

"கொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்திக்கு ஒரு கோடியை நாடாளுமன்றம் வழங்குகின்றது. நாடாளுமன்றத்தில் 80 இலட்சத்தை சேர்த்து கையளிக்கின்றார்கள். இது உண்மையில் வரவேற்க வேண்டிய விடயம். வீட்டில் வருமானத்தை உழைப்பவர்கள் இல்லாமல் போனபின்னர், குடும்பத்தை நடத்திச் செல்ல ஒரு கோடியாவது அவசியம் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளமை நல்ல விடயம்.

எனினும் 89ல் இருந்து மனதளவில் கவலையடைந்துள்ள, என்ன நடந்தது எனத் தெரியாத, உண்மையை அறியாதவர்களுக்கு அரசாங்கம் அமரகீர்த்தியின் குடும்பத்திற்கு உதவியதுபோல் உதவ வேண்டும்.

இதனிடையே காணாமல் ஆக்கப்பட்ட ஒருவருக்கு 200,000 ரூபா நட்டஈடு வழங்குமாறு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி முன்வைக்கப்பட்ட யோசனையை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவு இடம்பெற வேண்டுமென தென்னிலங்கை சிவில் செயற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

எனினும் இலங்கை அரசின் காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கான அலுவலகத்தை நிராகரித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் நட்ட ஈட்டையும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments