கைவிடப்படும் காற்றாலைகள்!

 


இலங்கை மின்பற்றாக்குறையால் திணறிவருகின்ற நிலையில் மன்னார், சிலாவத்துறை பிரதேசத்தை மையமாகக் கொண்டு உருவாக்கத் திட்டமிடப்பட்டிருந்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையப் பணிகள் கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கான போதிய நிதிவளம் இன்மை காரணமாகவே மின்சார சபை கைவிடும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

தற்போதைய நிலையில் காற்றாலை மின்னுற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான காணிகள் கையகப்படுத்தப்பட்டு, அதற்கான இழப்பீடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

எனினும்; காற்றாலை அமைக்கப்படுவதன் காரணமாக வலசை வரும் பறவையினங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது தொடர்பில் சாத்திய வள அறிக்கை தயாரிக்கப்படும் போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக மின்சார சபையின் தகவல் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே கிளிநொச்சி பூநகரியில் இந்திய அதானி குழுமத்தின் மின் உற்பத்தி நிலையமொன்று திறக்கப்படவுள்ளது.

அதேபோன்று யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளில் இந்திய நிதி உதவியின் கீழ் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments