இந்திய தூதரகத்தில் சிறீதரன்!

 



இலங்கை கடற்பரப்பிலான இந்திய மீனவர்களது அத்துமீறல் விடயத்தை தேசிய மக்கள் சக்தி அரசும் அதன் கடற்றொழில் அமைச்சரும் இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரமாக முடுக்கிவிட்டுள்ளதாக இந்திய தூதரகம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்றது.

இந்நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான கடற்றொழிலாளர்கள் குழுவினருக்கும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்திய இழுவைமடிப் படகு மீனவர்களால் நயினாதீவு மீனவர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் பற்றியும் இந்திய துணைத் தூதுவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய அரசின் நிதியுதவியுடன் நயினாதீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரியகல மின் உற்பத்தித் திட்டம், அதனுடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி, வங்களாவடி மற்றும் துறைமுக அபிவிருத்திகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் நடைபெற்ற்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் நயினாதீவு கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.


No comments