சிறுவன் படுகொலை:திசைமாற்ற முயற்சி!
அல்லைப்பிட்டி சிறுவன் படுகொலையை நியாயப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளுர் தலைவர்கள் மக்களை தூண்டிவிட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத கால்நடைகளை திருடும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி வேலணையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேசத்தில் 420 இற்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட பண்ணையாளர்கள் இருகுகின்றார்கள். அல்லைப்பிட்டி பகுதியில் இதுவரை 4000 ஆயிரத்துக்கும் அதிகமான மாடுகள் திருட்டுக் கும்பல்களால் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்பட்டுவிட்டன.
அத்துடன் ஒட்டுமொத்த வேலணையை எடுத்துக்கொண்டால் அது 30 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதில் நல்லின கறவை மாடுகளும் அடங்கும்" என போராட்ட காரர்கள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட சிறுவன் சட்டவிரோத கால்நடைகளை திருடும் கும்பலை சேர்ந்தவனென பிரச்சாரங்கள் இலங்கை காவல்துறையினால் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment