விடுதலைக்கு சட்டத்தரணிகள் வரிசையில்!

 


பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் சங்கீதனை,விடுதலை செய்வது தொடர்பில் தமிழ் சட்டத்தரணிகள் பலரும் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில் சட்டத்தரணியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்பு செயலாளருமான நடராஜர் காண்டீபன் இன்று காலை கலைஞன் சங்கீதனை  யாழ் சிறைச்சாலையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

பாடகர் தாயக எழுச்சிப் பாடலை சீர் செய்து தனது தளத்தில் பதிவிட்டதாக தெரிவித்தே கலைஞர் மீது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் இலங்கை காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

பொன் சிவகுமாரனின் 52 ஆவது நினைவேந்தல் உரும்பிராயில் உள்ள திருவுருவச்சிலையில் வழமைபோன்று நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உத்தியோகபூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலங்களை காவல்துறையினர்பெற்றுள்ளனர்.


No comments