பொலிஸ் வேடமிட்டு கொள்ளை!பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமணிந்த 3 பேர் வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டி தாக்கி சொத்துகளை சூறையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று காலை  வீட்டின் உரிமையாளர் தனது நண்பர்கள் மூவருடன் தற்காலிகமாக கட்டப்பட்ட வீட்டில் தங்கியிருந்த போதே சந்தேகநபர்கள் பொலிஸார் என கூறி வீட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் குறித்த நபர்களை மண்டியிடச் செய்து அவர்களிடம் இருந்த தங்க வளையல், 02 தங்க மோதிரங்கள், 02 தங்க சங்கிலிகள், 02 பென்டன்ட்கள், 355,000 ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி மற்றும் ஏனைய சொத்துக்களை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட சொத்தின் பெறுமதி 18 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments